காஞ்சிபுரம் மாவட்டம் காந்தி ரோடு பகுதியில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இந்தக் கட்டடத்தின் மாடியில் விளம்பரப் பதாகை வைக்க இளங்கோ, செந்தில் ஆகிய இருவர் சென்றனர்.
அங்கு விளம்பரப் பதாகை வைக்கும்போது பதாகையின் கம்பி உயர் மின்னழுத்த வயரின் மீது உரசியது. உடனே இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இளங்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செந்திலுக்கு கை, காலில் படுகாயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் இளங்கோவின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்போது செந்தில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணி உயிரிழப்பு!