ETV Bharat / state

பாலியல் தொழில் பணத் தகராறில் வட மாநில இளைஞர் கொலை - 5 பேர் கைது - kanchipuram district news

பாலியல் தொழில் பணத் தகராறில் வடமாநில இளைஞரை அடித்துக்கொலை செய்தது தொடர்பாக ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

tn_kpm_01_sriperumbudur_north_indian_youth_murdered_pic_vis_script_TN10033
பாலியல் தொழில் பணத் தகராறில் வட மாநில இளைஞர் கொலை- 5 பேர் கைது
author img

By

Published : Jul 28, 2021, 10:33 AM IST

காஞ்சிபுரம்: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேல் சாகா(34) ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் உள்ள ஹோட்டலில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இஸ்ரேல் சாகா கடந்த 18ஆம் தேதி நண்பர்களிடம் பணம் வாங்கச் செல்வதாக சென்றவர் அதன்பிறகு ஹோட்டலுக்கு திரும்பவில்லை. இந்நிலையில், தம்பி காணமால் போனது தொடர்பாக, அவரது அண்ணன் இஸ்மாயில் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் இஸ்ரேல் சாகவின் செல்போன் அழைப்புகள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவரது நண்பரான குருதேவ்குமாரைதான், இஸ்ரேல் சாகா கடைசியாக சந்தித்தது தெரிய வந்தது. அதையடுத்து ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த குருதேவ்குமாரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இஸ்ரேல் சாகா தான்பணிபுரியும் ஹோட்டலில் தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணை, மேவலுர்குப்பம் ஏரிக்கரைப் பகுதியில் தனிவீட்டில் பாலியல் தொழில் செய்துவரும் ஜெயக்குமாரிடமும், குருதேவ்குமாரிடமும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

பின்னர், பணம் கேட்டபோது ஏற்பட்ட தகராறில், ஜெயக்குமார் தனது நண்பர்களுடன் இணைந்து, இஸ்ரேல் சாகாவை இரும்பு ராடால் அடித்துக்கொலை செய்துள்ளார். மேலும், அவரின் உடலை அக்கிராமத்தில் உள்ள கிருஷ்ணா கால்வாய் அருகில் கூட்டாக சேர்ந்த புதைத்துள்ளனர் என்பது தெரியவந்தது.

இக்கொலை தொடர்பாக, ஜெயக்குமார்(24), அவரது கூட்டாளி ருக்மானந்தம்(23), ரஞ்சித்(26), குருதேவ்குமார்(23), அஜித்குமார்(23) ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஆசிரியர் திட்டியதால் மாடியிலிருந்து விழுந்து மாணவி தற்கொலை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.