ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் முதல் நாளில் ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை! - வேட்பு மனு தாக்கல் செய்ய முதல் நாள்

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட முதல் நாளான நேற்று (மார்ச் 12) காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட முதல் நாளான இன்று(மார்ச் 12) காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

author img

By

Published : Mar 13, 2021, 8:26 AM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்பட்ட காஞ்சிபுரம், உத்திரமேரூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலகத்திலும், ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் நடத்தும் அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த வேட்புமனு தாக்கல் நேற்று (மார்ச் 12) தொடங்கியது.

முதல் நாளில் காஞ்சிபுரத்தில் ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை!

இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்கள் அலுவலகங்களில் வேட்புமனு பெற அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு தயார் நிலையில் இருந்தனர். நாளைய தினம் அமாவாசை என்பதால், வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான இன்று காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி) ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதியில் ஒருவர் கூட வேட்புமனுவை தாக்கல் செய்ய ஆர்வம் காட்டவில்லை. தேர்தலில் போட்டியிட விரும்பும் சிலர் மட்டும் வேட்பு மனுவை தாக்கல் செய்ய விருப்ப மனுக்களை பெற்றுச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பாஜக ஆட்சிக்கு வந்தால் கோயில்கள் பக்தர்களிடம் கொடுக்கப்படும் - சிடி ரவி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.