காஞ்சிபுரம் பாலுசெட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் அறுவடை செய்த நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாத காரணத்தால், விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை நிலைத்திற்கு வெளியே அடுக்கி வைத்துள்ளனர்.
தற்போது தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கோடை மழை பெய்து வருகின்றது. காஞ்சிபுரத்திலும் கோடை மழை பெய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சம் அடைந்துள்ள விவசாயிகள் அரசு கொள்முதல் செய்யதால் தனியாருக்கு ஒரு மூட்டை நெல்லை ரூ 600 விற்பனை செய்து வருகின்றனர். அரசு கொள்முதல் செய்தால் ஒரு மூட்டைக்கு ரூ 1600 கிடைக்கும்.
இதனால் தாங்கள் பெரும் நஷ்டம் அடைந்திருப்பதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே விவசாயிகள் நலன் கருதி நெல் கொள்முதல் நிலையத்தை அரசு உடனே திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.