காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால் பேட்டை ஊராட்சி இந்திராநகர் பகுதியில் வசிக்கும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் பகுதியில் நீண்ட காலமாகவே போதிய அளவு குடிநீர் வராமல் அவதிப்பட்டு வருவதாக அரசிடம் மனு அளித்துவந்தனர்.
இதையடுத்து, கனிமவள நிதியில் இருந்து சுமார் 22 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இந்திரா நகர் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக புதிதாக குடிநீர் மேல்நிலை தொட்டி அமைக்க உத்தரவிடப்பட்டது. அதையொட்டி புதிய குடிநீர் மேல்நிலை தொட்டி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
இந்திரா நகர் பகுதி பொதுமக்கள் முன்னிலையில் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் புதிய குடிநீர் மேல்நிலை தொட்டி அமைப்பதற்கு பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி இப்பணியினை தொடங்கி வைத்தார்.