ETV Bharat / state

‘அதிமுகவை நிராகரிப்போம்’: தீர்மானத்தை நிறைவேற்றவுள்ள ஸ்டாலின்! - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் நாளை (டிச.23) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றும் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.

‘அதிமுகவை நிராகரிப்போம்’: தீர்மானத்தை நிறைவேற்றவுள்ள ஸ்டாலின்

author img

By

Published : Dec 22, 2020, 7:13 PM IST

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும், “அதிமுகவை நிராகரிப்போம்” என்ற தீர்மானத்தை கிராம சபைகளில் இயற்றிட வேண்டும் என திமுக நிர்வாகிகளிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன் தொடக்கமாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்குட்பட்ட குண்ணம் கிராமத்தில், அதிமுகவை நிராகரிப்போம் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நாளை (டிச.23) காலை நடைபெறவிருக்கிறது.

இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அதிமுகவை நிராகரிப்போம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றவுள்ளார்.

இந்நிலையில் நாளை (டிச.23) நடைபெறவிருக்கும் இந்தக் கிராம சபை கூட்டத்தின் மைதான திடல் மற்றும் அங்கு நடைபெறும் பணிகளை காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆலந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் தா.மோ.அன்பரசன் இன்று (டிச.22) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வின்போது திமுக ஒன்றிய செயலாளர்கள் படப்பை ஆ.மனோகரன், நா.கோபால், எஸ்.டி.கருணாநிதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: லட்சம் லட்சமாக கொள்ளையடிக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ் - தங்க தமிழ்ச்செல்வன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.