காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் பகுதியில் தனியார் தொழிற்சாலை கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலையின் நிரந்தரப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 100 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் தொழிற்சாலை நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தொழிற்சாலைப் பணியாளர்கள் வருமானமின்றி திண்டாடி வருகின்றனர். இதில் ஏற்பட்ட மன உளைச்சலில் மணிகண்டன் (26) சமூக வலைதளத்தில் காணொலி ஒன்றை இன்று (டிச.28) வெளியிட்டுள்ளார்.
அதில், "நான் காணாமல் போனால் யாரும் என்னைத் தேட வேண்டாம். இதற்கு காரணம் நான் வேலை செய்த நிர்வாகம், தொழிலாளர் துறைதான்" எனப் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், முனுசாமி கூறியபடி தற்போது அவர் காணாமல் போயுள்ளார். இதுகுறித்து சக பணியாளர்கள் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: நீரில் மூழ்கி காணாமல் போன சிறுவன் - இரண்டாவது நாளாக தேடும் பணி!