ETV Bharat / state

CCTV: பஸ் கண்ணாடியை உடைத்த அந்த மூன்று பேர்; வெளியான பகீர் தகவல் - மாநகரின் மையப்பகுதியான பூக்கடை சத்திரம் பகுதி

காஞ்சிபுரத்தில் ஹாரன் அடித்தும் வழிவிடாத அரசுப்பேருந்தின் கண்ணாடியை 3 பேர் உடைக்கும் சிசிடிவி வெளியானது.

Etv Bharatஹாரன் அடித்தும் வழிவிடாத அரசுபேருந்தின் கண்ணாடியை  உடைத்த மர்ம நபர்கள்  -சிசிடிவி வெளியானது

author img

By

Published : Dec 4, 2022, 3:16 PM IST

காஞ்சிபுரம்: மாநகரின் மையப்பகுதியான பூக்கடை சத்திரம் பகுதியில் ஹாரன் அடித்தும் வழிவிடாததால் அரசுப் பேருந்து கண்ணாடியை பட்டாக்கத்தியைக் கொண்டு உடைத்த நபர்களால், பயணிகள் பேருந்திலிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்திற்குச் சொந்தமான T-87 எண் கொண்ட பேருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஓட்டுநர் சுப்பிரமணி மற்றும் நடத்துநர் சாரங்கன் மற்றும் சில பயணிகளுடன் கண்ணன்தாங்கல் கிராமத்திற்குச்செல்லும் வழியில், காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் சந்திப்பு வளைவில் திரும்பிய போது போக்குவரத்து நெரிசலால் நின்றிருக்கிறது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் பேருந்தினை மடக்கி, 'ஹாரன் அடித்தால் வழிவிட முடியாதா?' எனக் கேட்டிருக்கின்றனர்.

இதனையடுத்து சரி அவர்களை போகுமாறு கூறிய ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். பின்னர் பதிலுக்கு ஓட்டுநர் சுப்பிரமணி அந்த நபர்களை ஒருமையில் ‘போங்கடா’ எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற அந்நபர்கள் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பட்டாக்கத்தியைக் கொண்டு பேருந்தின் முன் பக்க கண்ணாடி மீது தாக்கியதால், பேருந்து ஓட்டுநர் அச்சத்திலேயே அதிர்ந்து போனார். இதனால் அரசுப்பேருந்து கண்ணாடி உடைந்ததைக் கண்டு, அந்நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் தொ.மு.ச நிர்வாகிகள் உடனடியாக அப்பகுதிக்கு வந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விவரம் கேட்டு, அதன் மூலம் சிவ காஞ்சி காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர் வந்து ஓட்டுநரிடம் நடந்த விவரங்களைக் கூறி பேருந்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றார்.

சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த நபர்களிடம் விசாரித்த காவல்துறையினர் சில நபரின் பெயர்களைக் கேட்டு தெரிந்து அவர்களைத்தேடும் பணியைத் தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் மூவர் ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்வதும், பட்டாக்கத்தியைக் கொண்டு ஓட்டுநரை வெட்ட முயல்வதும், அவர் தப்பவே பேருந்தின் கண்ணாடியில் வெட்டிவிட்டு அசால்ட்டாக செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஹாரன் அடித்தும் வழிவிடாத அரசுப்பேருந்தின் கண்ணாடியை உடைத்த மூன்று நபர்கள் - சிசிடிவி வெளியானது

இதையும் படிங்க:சந்து கடையில் மது விற்பனைக்கு போலீஸ் சர்போர்ட்..? எஸ்ஐ ஒருமையில் பேசிய வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.