தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் முதலமைச்சரின் அறிவிப்பின் படி அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் போந்தூர் ஊராட்சியில் அம்மா மினி கிளினிக் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை தமிழ்நாடு ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், சுதந்திர இந்தியாவிற்கு பிறகு கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் தொடர்ந்து பல்வேறு நிலைகளில் ஆட்சி செய்கின்ற இயக்கம் என்று சொன்னால் அது அதிமுக மட்டும் தான். அப்படிப்பட்ட இயக்கம் தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்றும். அதிமுகவின் வாக்கு வங்கி எந்த நிலையிலும் சிதறாது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரையாண்டுத் தேர்வு நடத்த தனியார் பள்ளிகளுக்கு நிபந்தனை!