ETV Bharat / state

'அதுக்கு சரிபட்டுவரமாட்டார்' - வடிவேலு டயலாக்கை வைத்து ஸ்டாலினை சாடிய ஓபிஎஸ்!

author img

By

Published : Jan 24, 2020, 9:27 AM IST

காஞ்சிபுரம்: திமுக தலைவர் ஸ்டாலின் குட்டிக்கரணம் போட்டாலும் முதலமைச்சராக முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சாடினார்.

Ops Speech, mgr birthday celebration
mgr birthday celebration

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் நேற்று எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அப்போது பேசிய துணை முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வகுத்த பசுமை வீடு திட்டத்தின் மூலம் சுமார் 6 லட்சம் ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எப்படியாவது முதலமைச்சராக வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அது ஒரு போதும் நடக்கப்போவதில்லை என்றார்.

அப்போது நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்திருந்த ஒரு படத்தின் காட்சியில் இடம்பெற்றிருந்த 'நீ அதுக்கு சரிபட்டுவரமாட்ட' என்ற வசனத்தைக் குறிப்பிட்ட துணை முதலைமைச்சர், ஸ்டாலின் குட்டிக்கரணம் போட்டாலும் முதலமைச்சராக முடியாது என சாடினார்.

விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்

மேலும், தமிழ்நாட்டில் பொய்யான வாக்குறுதிகளைப் பரப்பி மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதால் அதிமுக சரிவை சந்தித்தது. ஆனால் அதன்பின் நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்களில் வெற்றிபெற்று திமுகவுக்கு பதிலடி கொடுத்தோம். இந்த அடியில் இருந்து திமுகவால் எப்போதும் எழுச்சி காண முடியாது என்று கூறினார்.

இதையும் படிங்க: பிரெக்ஸிட்: ராணி எலிசபத் ஒப்புதல்!

Intro:திருக்கழுக்குன்றத்தில் இன்று எம்ஜி -ன் 103 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது இவ்விழாவில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

Body:காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் இன்று எம்ஜிஆரின் 103 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது .

இவ்விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அம்மா அவர்கள் வகுத்த திட்டம் மக்களுக்கான திட்டம் சுமார்

6 லட்சம் குடும்பங்களுக்கு பசுமை வீடு திட்டத்தின் மூலம் வீடு கட்டி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்

திமுக தலைவர் மு க ஸ்டாலின் எப்படியாவது முதலமைச்சராக வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறார் அது ஒரு போதும் நடக்கப் போவதில்லை வடிவேல் பாணியில் சொல்ல போனால் நீ எதுக்குமே சரிப்பட்டு வரமாட்டார் என்று நகைச்சுவையாக கூறினார்.

தமிழகத்தில் பொய்யான வாக்குறுதிகளை திமுக பரவி வருவதால் நாடாளுமன்றத்தில் இருந்து சட்டமன்றம் வரை சரிவு காணப்படுகிறது எனவே பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது திமுகவுக்கு புதிதல்ல

நடந்து முடிந்த நாங்குநேரி விக்ரவாண்டி இடைத் தேர்தலில் பலத்த அடி திமுகவுக்கு கொடுத்ததாகவும் வேலூர் தொகுதியில் அதிகப்படியான வாக்கு பெற்றதும் திமுகவுக்கு நாம் கொடுத்த பெரிய பதிலடி என தெரிவித்தார்.

Conclusion:நடைபெற்ற எம்ஜிஆரின் 103 ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம் தலைமையில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கழக நிர்வாகிகள் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.