அதிமுக நிறுவனரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 104ஆவது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜன.17) அவரது ரசிகர்கள், அதிமுகவினர் உள்ளிட்ட பலரும் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் தலைமையில், பல்வேறு இடங்களில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்திற்கும், சிலைக்கும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் எஸ்.எஸ்.ஆர் சத்யா, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித்குமார், மாவட்ட, ஒன்றிய, நகர முன்னனி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: எம்ஜிஆரின் கடைசி நிமிடங்கள்...!