ETV Bharat / state

மார்கழி முதல்நாள்: வீடுகள்தோறும் கோலமிட்டு பூசணி பூ வைத்து விளக்கேற்றிய பெண்கள்! - Margazhi month festival started in Kanchipuram

காஞ்சிபுரம்: இன்று மார்கழி மாதம் பிறந்ததை யொட்டி காஞ்சிபுரத்தில் வீடுகள்தோறும் கோலமிட்டு பூசணி பூ வைத்து விளக்கேற்றி பெண்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Margazhi Kolam
Margazhi Kolam
author img

By

Published : Dec 16, 2020, 9:11 AM IST

தமிழ் மாதங்களில் 12 மாதங்களும் ஒவ்வொரு சிறப்புகளைப் பெற்றுள்ளன. அந்தவகையில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் 'நான் மார்கழி மாதமாக இருக்கிறேன்' எனப் பகவத்கீதையில் அருளியுள்ளார். அதனால் 12 மாதங்களிலேயே புனித மாதமாகக் கருதப்படும் மார்கழி மாதம் இன்று (டிச. 16) பிறந்துள்ளது.

மார்கழி மாதத்தை வரவேற்கும்விதமாக காஞ்சிபுரத்தில் அதிகாலையிலேயே எழுந்த பெண்கள் பழமையை மறக்காமல் தங்கள் வீட்டு வாசல்களில் தண்ணீர் தெளித்து, வண்ண கோலமிட்டு, பூசணிப்பூ வைத்து வாசல்கள்தோறும் விளக்கேற்றி வைத்தனர்.

மார்கழி மாதத்தின் முதல்நாள்: வீடுகள்தோறும் கோலமிட்டு பூசணி பூ வைத்து விளக்கேற்றிய பெண்கள்

காஞ்சிபுரத்தில் உள்ள சிவன், பெருமாள் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களும் அதிகாலையிலேயே திறக்கப்பட்டு திருப்பாவை, திருவெம்பாவை ஒலிக்க பக்தர்களின் தரிசனத்திற்கு திறந்துவைக்கப்பட்டது. அதிகாலையிலேயே பக்தர்கள் சாமி தரிசனம் செய்து இறை வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: மார்கழி முதல் நாள்: கோலமிட்டு வழிபாடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.