ETV Bharat / state

அனுமதியின்றி தண்ணீர் எடுத்த லாரி, டிராக்டர் பறிமுதல்!

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் பகுதியில் அனுமதியின்றி ஆழ்துளை கிணற்றில் குடிநீரை எடுத்த லாரி, டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

lorry-seized
author img

By

Published : May 27, 2019, 1:33 PM IST

வாலாஜாபாத், அதன் சுற்றுவட்டார கிராமங்களில் போதிய அளவு மழை இல்லாததால் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்துவருகிறது. இந்நிலையில், சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கிணறு, ஆழ்துளை கிணறுகளில் உள்ள தண்ணீரை உறிஞ்சி லாரிகள், டிராக்டர்கள் அதிக விலைக்கு விற்பதாக தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

அந்தப் புகார்களின் அடிப்படையில் சார் ஆட்சியர் சரவணன் உத்தரவின்பேரில் வாலாஜாபாத் வட்டாட்சியர் கோடீஸ்வரன், மண்டல துணை வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் நேற்று சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது நத்தாநல்லுார் சேர்காடு பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் லாரிகளில் குடிநீர் எடுப்பதை பார்த்த அலுவலர்கள், அந்த வாகனங்களைப் பிடித்து தண்ணீர் எடுக்க அனுமதி உள்ளதா என ஆய்வு செய்தனர். அதில் குடிநீர் எடுத்துச்செல்ல எந்த அனுமதியும் பெறவில்லை எனத் தெரியவந்ததையடுத்து, தண்ணீர் எடுக்கப் பயன்படுத்திய லாரி, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

அனுமதியின்றி தண்ணீர் எடுத்த லாரி, டிராக்டர் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டரில் பதிவு எண் இல்லை எனவும், குடிநீர் ஆதாரத்திற்கான முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதாலும், அதன்மீது வழக்குப்பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டது. மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிநீர் தேவை அதிகம் ஏற்பட்டுள்ளதால் நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சி அனுமதியின்றி விற்பனை செய்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது போன்ற தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் 27.05.2019

 *வாலாஜாபாத் பகுதியில் அனுமதியின்றி குடிநீரை எடுத்த லாரி டிராக்டரை வாலாஜாபாத் வட்டாட்சியர் பறிமுதல் செய்தனர் .... இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா எச்சரிக்கை..* 

வாலாஜாபாத் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் போதிய அளவு மழை இன்றி நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருகிறது இந்த நிலையில் வாலாஜாபாத் சுற்றுவட்டார கிராம நிலங்களில் உள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீரை உறிஞ்சி லாரிகள் மற்றும் டிராக்டர் கொண்டு அதிக விலைக்கு விற்பதாக தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றன... அதனடிப்படையில் சார் ஆட்சியர் சரவணன் உத்தரவின் பேரில் வாலாஜாபாத் வட்டாட்சியர் கோடிஸ்வரன் , மண்டல துணை வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று வாலாஜாபாத் மற்றும் சுற்றுப்புறங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்... அப்போது வாலாஜாபாத் அடுத்த நத்தாநல்லூர் சேர்காடு பகுதியில் அனுமதியின்றி ஆழ்துளை கிணறு மூலம் லாரிகளில் குடிநீர் எடுத்து வந்தனர் இதனை கண்ட அதிகாரிகள் அந்த லாரி மற்றும் டிராக்டரை பிடித்து முறையான அனுமதி உள்ளதா என ஆய்வு செய்தபோது குடிநீர் எடுத்து செல்ல எந்த அனுமதியும் பெறவில்லை என தெரியவந்ததையடுத்து லாரி மற்றும் டிராக்டர் பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்த டிராக்டர் பதிவு எண் ஏதும் இல்லை எனவும் குடிநீர் ஆதாரத்திற்கான எந்த முறையான ஆவணங்கள் இல்லை என்பதாலும் அதன் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது ..மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிநீர் தேவை அதிகம் ஏற்பட்டுள்ளதால் நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சி அனுமதியின்றி விற்பனை செய்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது போன்ற தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார்....
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.