ETV Bharat / state

கார் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு - Kancheepuram Lorry Accident

காஞ்சிபுரம்: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் கார் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கார் மீது லாரி மோதி விபத்து  தமிழ்நாடு கார் மீது லாரி மோதி விபத்து  காஞ்சிபுரம் லாரி விபத்து  தேசிய நெடுஞ்சாலை லாரி விபத்து  Lorry Accident With Car In Kancheepuram  Tamilnadu Lorry and Car Accident  Kancheepuram Lorry Accident  Highway Car Accident
Lorry Accident With Car In Kancheepuram
author img

By

Published : Jan 7, 2021, 2:34 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகேயுள்ள பிள்ளைச்சத்திரம் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. அப்போது, திருப்பத்தூரிலிருந்து சென்னை நோக்கி பின்னால் வந்த கார் மீது எதிர்பாராதவிதமாக லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த ஓட்டுநர் ஜாகிர் அகமது(48, சவுத் அகமது(48), சவுக்கத்(35) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுங்குவார்சத்திரம் காவல் துறையினர் மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மூவரில் ஓட்டுநர் ஜாகிர் அகமது சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் லாரி- கார் விபத்தினால் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி மோதி 13 மாடுகள் பலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.