ETV Bharat / state

தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண்! குற்றவாளியை கைது செய்த காவல்துறை! - காஞ்சிபுரத்தில் இளம்பெண் தூக்கிட்டு கொலை

காஞ்சிபுரம்: காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உறவினரின் போராட்டத்தைத் தொடர்ந்து குற்றவாளியை கைது செய்த காவல்துறை...

Kanchipuram woman suicide
Kanchipuram woman suicide
author img

By

Published : Nov 30, 2019, 10:46 AM IST

காஞ்சிபுரம் அடுத்த ஆன்டிசிறுவள்ளூர் பகுதியில் வசிப்பவர் பூபதி. இவருடைய மகள் மதிப்பிரியா(19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பக்கத்து கிராமமமான காரையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் இப்பெண்ணை அழைத்துச்சென்றதாக கைப்பேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.

பெற்றோர் மற்றும் உறவினர்கள் இளம்பெண்ணை தேடிவந்த நிலையில் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் இவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார். இதைக் கண்ட அப்பகுதியினர் காஞ்சி தாலூகா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் சந்தேகித்ததின் பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் மக்கள் மன்றத்தினரும் காவல்துறையினரிடம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை உடனடியாக கைது செய்ய கோரினர். தொடர்ந்து காவல்துறையைக் கண்டித்து மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தைத் தொடர்ந்து குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் நேற்று அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:

திருமணமான பெண்ணுக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை!

Intro:காஞ்சிபுரம்

மர்மமான முறையில் இறந்து கிடந்த இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் காவல்துறையில் புகார்

Body:காஞ்சிபுரம் அடுத்த ஆன்டிசிறுவள்ளூர் பகுதியில் வசிக்கும் பூபதி என்பவரின் மகளான ரோஜா வயது 19 தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை என தேடி வந்த நிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார்.இதைக் கண்டவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் பெயரில் காவல்துறையினர் சடலத்தை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்த இளம்பெண் ரோஜாவின் சாவில் மர்மம் இருக்கிறது.காரை கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் இப்பெண்ணை அழைத்துச்சென்று விட்டு விட்டு சென்றதாக ரோஜாவின் உறவினருக்கு ராஜேஷ் போன் மூலமாக தகவல் தெரிவித்துள்ளார். அவரது போன் தகவலை அடுத்து ரோஜாவை தேடி வந்த நிலையில்தான் ரோஜா அருகில் உள்ள தோட்டத்தில் தூக்கிட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் கூறியதன் பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் மக்கள் மன்றத்தினரும் காவல்துறையினரிடம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரினர்.

Conclusion:காவல்துறையின் அலட்சியமான போக்கினால் மருத்துவமனை முன்பு சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலித் இளம் பெண் இறந்து கிடந்த சம்பவம் குறித்து இப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.