காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குள்பட்ட 10ஆவது வார்டு கிழக்கு ராஜ வீதி பகுதியில் செயல்பட்டுவந்த அங்கன்வாடி மையம் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத அளவிற்கு இருப்பதாக குழந்தைகளின் பெற்றோர்களும், பொதுமக்களும் காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசனிடம் புகார் தெரிவித்தனர்.
புதிய அங்கன்வாடி மைய கட்டட பணி: பூமிபூஜை போட்ட காஞ்சிபுரம் எம்எல்ஏ!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கிழக்கு ராஜவீதியில் ரூ.13.5 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி மையம் கட்டடம் கட்டும் பணியினை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.
kanchipuram
காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குள்பட்ட 10ஆவது வார்டு கிழக்கு ராஜ வீதி பகுதியில் செயல்பட்டுவந்த அங்கன்வாடி மையம் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத அளவிற்கு இருப்பதாக குழந்தைகளின் பெற்றோர்களும், பொதுமக்களும் காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசனிடம் புகார் தெரிவித்தனர்.
அதன்படி காஞ்சிபுரம் கிழக்கு ராஜ வீதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று (டிச. 16) நடைபெற்றது. அதனையொட்டி காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன் கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுவதற்கான பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.
மேலும் அப்பகுதியினருக்கு இனிப்புகளையும் அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, பொறியாளர் ஆனந்த ஜோதி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ. சேகரன், நகரச் செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.