காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ரயில்வே சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து மருத்துவமனைக்கு வந்து செல்லும் நிலையில், சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.
இந்தப் புகாரின் எதிரொலியாக, காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன் மருத்துவமனைக்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசிடம் கேட்டுப் பெற்ற எம்ஆர்ஐ ஸ்கேன் பிரிவு உரிய முறையில் செயல்படாதது குறித்தும், நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்காதது குறித்தும் மருத்துவமனை ஊழியர்களிடம் கடிந்துகொண்டார்.
மேலும், கையூட்டு பெறும் ஊழியர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என மருத்துவமனை அலுவலர்களிடம் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: மதுரவாயல் - வாலாஜா சுங்கச்சாவடிகளில் முழுக் கட்டணம் வசூல் - நீதிமன்ற உத்தரவு மீறல் என வாகன ஓட்டிகள் புகார்!