ETV Bharat / state

கனமழையால் முழுக் கொள்ளளவை எட்டிய 540 ஏரிகள் - lakes water leve

காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள 540 ஏரிகள், கடந்த ஒரு வார காலமாக பெய்த மழை காரணமாக முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.

முழு கொள்ளவை எட்டிய ஏரிகள்
முழு கொள்ளவை எட்டிய ஏரிகள்
author img

By

Published : Dec 2, 2020, 6:42 PM IST

காஞ்சிபுரம்: கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையின் காரணமாக, காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 909 ஏரிகளில், 540 ஏரிகள் நூறு விழுக்காடு கொள்ளளவை எட்டியுள்ளன.

இதில் 268 ஏரிகள் 75 விழுக்காடு கொள்ளளவையும், 101 ஏரிகள் 50 விழுக்காடு கொள்ளளவையும் எட்டியுள்ளதாக பொதுப்பணி துறை தகவல் தெரிவித்துள்ளது.

குறிப்பாக காஞ்சிபுரத்திலுள்ள 95 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 173 ஏரிகளும் 75 விழுக்காடு கொள்ளளவையும், காஞ்சிபுரத்தில் 68 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்று ஏரிகளும் 50 விழுக்காடு கொள்ளளவை எட்டியுள்ளன.

கனமழையால் முழுக்கொள்ளவை எட்டிய ஏரிகள்

காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டங்களில் 16 மிகப்பெரிய ஏரிகள் உள்ளன. இதில் காஞ்சிபுரத்தில் முதன்மையானதாக தென்னேரி ஏரி உள்ளது. இங்கு 18 அடி ஆழத்தில் 1 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்க முடியும். தற்போது ஏரி 18 அடி நிரம்பி அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.

தாமல் ஏரியின் முழுக் கொள்ளளவான 18.60 அடியில், தற்போது 14.50 அடி வரை நீர் நிம்பியுள்ளது. அதேபோல் உத்திரமேரூர் ஏரியின் மொத்த கொள்ளளவான 20 அடியில் தற்போது 9.50 அடிவரை நீர் நிரம்பி உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் ஏரியின் 17.70 அடியில் தற்போது 16.98 அடி நீர் நிரம்பி உள்ளது. மணிமங்கலம் ஏரி தனது முழுக் கொள்ளளவான 18.40 அடியை எட்டியுள்ளது. பிள்ளைபாக்கம் ஏரியின் 13.20 அடி முழுக் கொள்ளளவில் 12.25 அடி நீர்நிரம்பி உள்ளது எனப் பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கொடைக்கால் ஏரிக்குள் மீன்களை அதிகரிக்க மீன்வளத்துறை நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.