ETV Bharat / state

காஞ்சியில் ஸ்ரீ அஷ்டபூஜப் பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு! - Vaikunta Ekadasi news

காஞ்சிபுரம்: 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ அஷ்டபூஜப் பெருமாள் கோயிலில் இன்று (டிச. 25) சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

காஞ்சியில் ஸ்ரீ அஷ்டபூஜப் பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு!

author img

By

Published : Dec 25, 2020, 11:17 AM IST

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் முக்கிய சைவத் திருத்தலங்களும், வைணவத் திருத்தலங்களும் அதிகம் உள்ளன. விஷ்ணு கோயில்கள் அதிகம் உள்ளதால் விஷ்ணு காஞ்சி என்றழைக்கப்படும் சின்ன காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக புஷ்பவல்லி சமேத ஸ்ரீ அஷ்டபூஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கும் சிறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும். அதையொட்டி ஆண்டுதோறும் உள்ளூர், வெளியூர், ஆந்திரா, கர்நாடக, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமியை தரிசித்துச் செல்வர்.

இந்நிலையில் இந்தாண்டு கரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி ரத்துசெய்யப்பட்டது. இருந்தாலும், இன்று (டிச. 25) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ அஷ்டபூஜப் பெருமாள் கோயிலில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய நிலையில் இன்று (டிச. 25) அதிகாலை 5 மணியளவில் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதையடுத்து, சொர்க்க வாசல் வழியாக உற்சவர் பெருமாள் எழுந்தருளி கோயில் உள்பிரகாரத்தில் வலம்வந்து அருள்பாலித்தார்.

காஞ்சியில் ஸ்ரீ அஷ்டபூஜப் பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு!

வரலாற்றிலேயே முதல் முதலாக பக்தர்கள் இன்றி வெறிச்சோடி நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் சொர்க்க வாசல் நிகழ்வில் பக்தர்களுக்கு குறிப்பிட்ட நேரம் மட்டும் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபூஜப் பெருமாள் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில் பக்தர்கள் அனுமதி ரத்துசெய்யப்பட்டது காஞ்சி பக்தர்களை மிகுந்த ஏமாற்றத்தை உள்ளாக்கியுள்ளது.

இதையும் படிங்க...மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.