காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது அதிவேகமாக சென்ற கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டியவர், சென்னை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேகவதி ஆற்றுப்பாலத்தில் நேற்று (ஆக.8) மாலை மாவட்ட ஆட்சியர் வளாகம் வழியாக பழனி என்பவர் காரில் செவிலிமேடு நோக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சூர்யா என்ற இளைஞர் பழனியின் காரின் எதிரே, முன்சென்று கொண்டிருந்த ஆட்டோவைக் கடக்க முயற்சித்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக பழனியின் கார் மீது நேருக்குநேர் மோதி அதிவேகமாக தூக்கி வீசப்பட்டார்.
இதில் பலத்த படுகாயமடைந்த சூர்யா காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன் பின்மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு சிகிச்சைப்பெற்று வருகிறார். மேலும், இவ்விபத்து குறித்து காஞ்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்து குறித்த காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவியில் தெளிவாகப்பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது இவ்விபத்து தொடர்பாக காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் தூக்கி வீசப்பட்ட பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மூணார் மாட்டுப்பட்டி அணை திறப்பு