ETV Bharat / state

அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அடிதடி - மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு! - Kancheepuram Government Hospital fight in Emergency care unit

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் நடந்த அடிதடியால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அடிதடி

author img

By

Published : Oct 31, 2021, 5:59 PM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் கார்மேகம் ஆகிய இருவருக்கும் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று (அக்.30) இரவு பாலகிருஷ்ணன் சாலையில் செல்லும் பொழுது விபத்துக்குள்ளாகியுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த கார்மேகத்திடம் பாலகிருஷ்ணன் ஆதரவாளர்கள் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலகிருஷ்ணன் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தகராறில் காயமடைந்த கார்மேகமும் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்திற்கு காரணம் கார்மேகம் தான் என கூறி பாலகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதுடன், மருத்துவமனையிலிருந்த நாற்காலியை கொண்டும் கார்மேகத்தை அடிக்க முயற்சித்தனர்.

அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அடிதடி
அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அடிதடி

இதனால் அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் என அனைவரும் மிகுந்த அச்சம் அடைந்தனர். காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விரைந்து சென்ற காவலர்கள் ரகளையில் ஈடுபட்டவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மருத்துவமனை சார்பாக ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கே. பாலகிருஷ்ணனை நேரில் சென்று நலம் விசாரித்த முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.