காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பஜார் வீதியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினருக்கு தொடர் புகார்கள் வந்தன.
அதனடிப்படையில் பஜார் வீதியில் உள்ள வணிக வளாகங்களில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஸ்ரீதர்(53) என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான் மசாலா போன்ற போதைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து 80 கிலோ எடையுள்ள 70 ஆயிரம் மதிப்புடைய போதைப்பொருள்களை பறிமுதல் செய்த காவலர்கள் மளிகைக் கடை உரிமையாளர் ஸ்ரீதரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: அரசியலுக்கு வாங்க சின்னம்மா... சசிகலா வீட்டின் முன் தொண்டர்கள் தர்ணா!