காஞ்சிபுரம்: சக்தி தலங்களில் முதன்மையானதாகவும், உலகப்பிரசித்தி பெற்ற தலமாகவும் விளங்கும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி உற்சவம் கடந்த 9 நாட்களாக வெகு விமரிசையாக நடைபெற்றது.
பத்தாவது நாளான இன்று(அக்.15) விஜயதசமியை ஒட்டி, காமாட்சி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
இந்நிலையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய கோயிலில் அனுமதிக்கலாம் என உத்தரவிட்டதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமையான இன்று, காலை முதலே உள்ளூர், வெளியூர் என ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வந்து, கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி காஞ்சி காமாட்சியை தரிசனம் செய்துவிட்டுச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து, நவராத்திரி உற்சவத்தில் பத்தாவது நாளான இன்று காஞ்சிபுரத்திற்கு உலகப்புகழ் சேர்க்கும்
வண்ண வண்ணபட்டு நூலால் காஞ்சி காமாட்சி அம்மனை வடிவமைத்து, மயிலிறகு மாலை, முந்திரி மாலை, பாதாம் மாலை, பிஸ்தா மாலை, ஏலக்காய் மாலை, மஞ்சள் கிழங்கு மாலைகளால், அலங்கரித்து பக்தர்களின் தரிசனத்திற்காக கோயில் மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
கோயில் மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட காமாட்சி அம்மன் பக்தர்களை வெகுவாக கவர்ந்ததால் பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு ஆர்வத்துடன் தங்கள் செல்போனில் படம் பிடித்துச் சென்று வருகின்றனர்.
இதையும் படிங்க:’கோயம்பேடு மேம்பாலத்தை உடனடியாகத் திறந்திடுக’ - இபிஎஸ் கண்டனம்