ETV Bharat / state

திறமைகளை வெளிப்படுத்துவதில் மட்டுமே வெற்றி கிடைக்கிறது - இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா - இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா

இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகப்புகழ்பெற்ற காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

செஸ் வீரர் பிரக்ஞானந்தா
செஸ் வீரர் பிரக்ஞானந்தா
author img

By

Published : Jun 21, 2022, 5:47 PM IST

காஞ்சிபுரம் தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 8ஆவது தேசிய யோகா தின நிகழ்ச்சியில் இந்தியாவின் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா கலந்துகொண்டார். பின் உலகப்புகழ்பெற்ற காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு சாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு காமாட்சி அம்மன் திருவுருவப்படம், பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தனது தாயாரின் நீண்ட நாள் ஆசையாக இருந்த காமாட்சி அம்மன் தரிசனம் தற்போது மகிழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. மாமல்லபுரம் போட்டிக்கான பயிற்சிகள் சிறப்பாக இருந்தது. இப்போட்டி தமிழ்நாட்டில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதற்காக செஸ் போர்டு வாரியத்திற்கும், முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்து கொண்டார்.

காஞ்சி காமாட்சி கோயிலில் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா குடும்பத்துடன்

ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் சார்பில் அம்மன் படம் வழங்கப்பட்டது

மேலும், தான் சிறப்பாகப் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் ஒருபோதும் செஸ் போட்டியின்போது, வெற்றி எனும் நோக்கில் செயல்படாமல் தனது திறமையை வெளிப்படுத்துவதில் மட்டுமே வெற்றி கிடைக்கிறது எனவும் தெரிவித்தார். இந்நிகழ்வின்போது அவரது தாயார் நாகலட்சுமி, பயிற்சியாளர் ரமேஷ்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

உலக செஸ் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியவர் சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. இவர் செஸ் உலகில் பல்வேறு பிரமாண்ட சாதனையைப் படைத்துள்ளார். இந்நிலையில் மாமல்லபுரத்தில் 44ஆவது ஒலிம்பியாட் செஸ் போட்டி வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2500-க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் பங்கேற்க உள்ளவர்களில் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தற்போது தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

காஞ்சிபுரத்தில் இந்திய இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சாமி தரிசனம்
இதையும் படிங்க: சதுரங்க விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் பள்ளி மாணவன்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.