ETV Bharat / state

உத்திரமேரூரில் பழங்கால கோயிலில் 1 கிலோ தங்கப் புதையல் கண்டெடுப்பு!

காஞ்சிபுரம்: 500 ஆண்டு கால பழமையான உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக திருப்பணி மேற்கொள்ளும்பொழுது குவியல் குவியலாகத் தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Kanchipuram uthiramerur treasure trove discovered

author img

By

Published : Dec 13, 2020, 6:44 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் குழம்பேஸ்வரர் கோயில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் உள்ள இக்கோயிலைப் புதுப்பித்து குடமுழுக்கு நடத்த கோயில் விழாக் குழுவினர், ஊர் பொதுமக்கள் முடிவுசெய்தனர்.

இதனையடுத்து, கோயில் கருவறையின் நுழைவு வாயிலின் முன் உள்ள கருங்கற்களாலான படிக்கட்டுகளைத் திருப்பணிக் குழுவினர் அகற்றினர். அப்போது அதன்கீழ் துணியால் சுற்றப்பட்ட சிறிய அளவிலான மூட்டை இருந்தது. அதைப் பிரித்து பார்த்தபோது ஏராளமான தங்க ஆபரணங்கள் இருந்தன. மேலும் வருவாய்த் துறை அனுமதி இல்லாமல் 500 ஆண்டுகால பழமையான கோயிலை முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். அப்பொழுது கோயிலில் படிக்கட்டை ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு பெயர்க்கும்பொழுது குவியல் குவியலாகத் தங்கம் கிடைத்ததாக வருவாய்த் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கிடைக்கப்பெற்ற தங்கத்தை வருவாய்த் துறையினர் பறிமுதல்செய்வதற்காக கோயில் அமைந்துள்ள பகுதிக்குச் செல்லும்பொழுது அப்பகுதி மக்களுக்கும் வருவாய்த் துறைக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

500 ஆண்டுகால பழமையான கோயிலை எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் தன்னிச்சையாக அப்பகுதியைச் சார்ந்த நபர்கள் இடித்து தரைமட்டமாக்கி புதிதாக ஒரு கோயில் கட்டுவதற்கு தீர்மானித்தது. இப்பணியை மேற்கொள்ளும்பொழுது கோயில் நுழைவாயில் உள்ள படிக்கட்டின்கீழ் தோராயமாக 100 சவரன் தங்க நகைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்நிலையில் புதையலாக கிடைத்த பழங்காலத்து தங்கத்தை அப்பகுதி பொதுமக்கள் சிலர் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயிலில் தங்கப் புதையல் கண்டெடுப்பு

கடந்த 16ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் தங்கம் பயன்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்நியர்கள் படையெடுப்பு காரணமாக அக்காலத்தில் வாழ்ந்த முன்னோர்கள் போர் பதற்றத்தின் அச்சுறுத்தல் காரணமாகவே சுவாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட நகைகளை இந்தக் கோயிலின் பல்வேறு பகுதிகளில் புதைத்துவைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்போது கண்டெடுக்கப்பட்ட நகைகள் யாவும் சுவாமி சிலைகளுக்கு திரு ஆபரணங்களாகச் சாத்தப்படும் நகைகள் என நம்பப்படுகிறது. மேலும், அம்பாள் காணவில்லை. பல அறிய தெய்வ சிலைகள் எல்லாம் தற்போது காணவில்லை என்று ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது பொதுமக்களால் கையகப்படுத்தப்பட்ட தங்க நகைகளின் மதிப்பீட்டு குறித்து வருவாய்த் துறையும், காவல் துறையும் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

இதையும் படிங்க...மகிழ்ச்சியைத் தாண்டி அச்சத்தைக் கிளப்பும் சென்னை மழை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.