உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலான ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் மார்கழி மாதம் இராப்பத்து உற்சவத்தின் ஏழாவது நாளான இன்று (ஜன. 1) கோயிலுக்குள்ளேயே சாமி உள் புறப்பாடு நடைபெற்றது.
அப்பொழுது பெருமாளின் முன்பு வேதபாராயணம் பாட முயன்ற வடகலை பிரிவினரை தென்கலை பிரிவினர் தடுத்து நிறுத்தி தள்ளியதால் கைகலப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
உடனடியாக காவல் துறையினர் தலையிட்டு இரு தரப்பினரையும் பிரித்துவிட்டனர். ஆண்டு முழுவதும் உற்சவம் நடைபெறும் வரதராஜ பெருமாள் கோயிலில் முக்கிய உற்சவங்களின் போது தொடர்ந்து இரு பிரிவினர் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருவதால், உற்சவத்தை காண வரும் பக்தர்கள் இவர்களின் செய்கையைக் கண்டு மன வேதனை அடைந்துள்ளனர்.
இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வழக்குகளில் அவ்வப்போது தீர்ப்பைப் பெற்று வந்தாலும் இரு தரப்பினரும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி உள்ளது.
இதையும் படிங்க...நேற்று திருடன்... இன்று திருடி... திருடர்களின் கூடாரமாகிறதா தென்மாவட்ட காவல்துறை?