காஞ்சிபுரம் ஸ்ரீ அத்திவரதர் வைபவத்தின் 42ஆவது நாளான இன்று, வெந்தய வண்ண பட்டாடை உடுத்தி ராஜ மகுடம் அணிந்தவாறு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஏகாதசி, கடைசி ஞாயிறுக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் இன்று அதிகமாக காணப்படுகிறது.
சுமார் 4 மணி நேரமாக மூன்று கி.மீ. துாரத்தில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்னும் ஐந்து நாட்களே அத்திரவரதர் வைபவம் காண முடியும் என்பதால், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
41ஆவது நேற்று நள்ளிரவு 1 மணியளவில், பொது தரிசனத்தில் அத்திவரதரை தரிசனம் செய்ய சுமார் 3 லட்சத்து 90 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், எண்ணப்பட தற்காலிக உண்டியலில் ரூ.5 கோடியே 44 லட்சம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர்.