ETV Bharat / state

ஏகாம்பரம் கோயில் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுப்பு - ekambaranathar temple land news

காஞ்சிபுரம்: 10 கோடி ரூபாய் மதிப்பிலான ஏகாம்பரம் கோயிலுக்கு சொந்தமான இடம் இன்று (ஜன.18) ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டது.

ekambaranathar temple land
ஏகாம்பரம் கோயில் நிலம்
author img

By

Published : Jan 18, 2021, 3:46 PM IST

காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை அருகே லாலா தோட்டம் பகுதியில் ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமாக 9 ஏக்கர் இடமுள்ளது. இதில் சுமார் 1.65 ஏக்கர் இடத்தினை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக இந்து சமய அறநிலையத் துறையினருக்கு தகவல் வந்தது.

தொடர்ந்து அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற காவல் துறையினரின் உதவியோடு இந்து சமய அறநிலையத் துறையினரும், வருவாய் துறையினரும் இன்று (ஜன.18) நடவடிக்கை எடுத்தனர். ஜேசிபி இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி 1.65 ஏக்கர் நிலத்தினை அதிரடியாக மீட்டெடுத்தனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தின் இன்றைய மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் ஆகும்.

இனி வரும் காலங்களில் யாரும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாத வண்ணமாக அவ்விடத்தினை சுற்றிலும் 3 அடி ஆழத்திற்கு பள்ளம் எடுக்கும் பணியானதும் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு துக்ளக் குருமூர்த்தி - முத்தரசன் விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.