தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவ உபகரணங்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றன.
இந்நிலையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான உதவிகளை தொழில் நிறுவனங்கள் வழங்கவேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கோரிக்கை விடுத்திருந்தார்.
மாவட்ட ஆட்சியரின் கோரிக்கையை அடுத்து, ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்படும் ஹூண்டாய் வையா தொழிற்சாலை நிறுவனம் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 20 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 10 ஆக்ஸிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், 20 ஆக்ஸிஜன் ரெகுலேட்டர்கள், முகக் கவசங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதனை ஹூண்டாய் வையா நிறுவன மேலாண்மை இயக்குநர் ஹம் சங் இல் இன்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், ஹூண்டாய் வையா நிறுவன முதன்மை அலுவலர் ஜாங் ஹூ ஜங், துணைப் பொது மேலாளர் ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: 50 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கிய ஹூண்டாய் நிறுவனம்!