கரோனா நோய்த்தொற்று காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நோய்த் தடுப்பு நடைவடிக்கையில் தேவையான மருத்துவ உபகரணங்களை பல்வேறு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
அந்தவகையில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் (HMIF) சார்பில்25 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 3,100 சுய-பாதுகாப்புப் பொருள்கள், 5,000 எண்-95 முகக் கவசங்கள், 700 ஆக்ஸிமீட்டர்கள், 600 லிட்டர் கிருமிநாசினி திரவம் ஆகியவை காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இன்று வழங்கப்பட்டன.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் அறங்காவலர் கணேஷ் மணி, காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி. எழிலரசன் முன்னிலையில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.