கடந்த 75 நாட்களுக்கு மேலாக தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவுதலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சிறு குறு தொழில்கள் உள்ளிட்ட பல தொழில்கள் மிகவும் பாதிப்படைந்ததால் அதில் பணிபுரிந்த தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்..
அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொழில் நிறுவனங்கள் தன்னார்வலர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தனது சமூக பங்களிப்பு நிதியிலிருந்து கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள காட்ராம்பாக்கம், புதுபேரூர், சுமந்திரமேடு, கீவளூர், தண்டலம், செட்டிபேடு, பென்னலூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் அடித்தட்டு பிரிவினை சேர்ந்த 2 ஆயிரம் ஏழை எளியவர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை தண்டலத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா வழங்கினார்.
![ஹீண்டாய் நிறுவனத்திற்க்கு காஞ்சி மாவட்ட ஆட்சியர் பாராட்டு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/hyundai-family-essential-kit-event-2_1106newsroom_1591839886_640.jpg)
இதையும் படிங்க: 'கறுப்பர்கள் வாழ்க்கைப் போராட்டம்'- நிக்சன் வழியில் ட்ரம்ப்!