ETV Bharat / state

இரவு நேரத்தில் வீடு புகுந்து கொள்ளை: 6 மணி நேரத்திற்குள் 3 பேர் கைது - இரவு நேரத்தில் வீடு புகுந்து கொள்ளை: 6 மணி நேரத்திற்குள் 3 பேர் கைது

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே வெளியூரிலிருந்து வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கும் வாகன ஓட்டுநர்களை, இரவு நேரத்தில் மூன்று நபர்கள் வீடு புகுந்து தாக்கி 2 செல்போன், ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்துச் சென்றனர். இதையடுத்து 6 மணி நேரத்திற்குள்ளாக மூவரையும் ஒரகடம் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

Home burglary at night: 3 arrested within 6 hours

author img

By

Published : May 1, 2021, 6:35 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே காரணிதாங்கல் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி எதிரில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகாவைச் சேர்ந்த பிரகாஷ், அவருடன் சுரேஷ் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வாடகை வாகனம் ஓட்டிவருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் பிரகாஷ் சிறுநீர் கழிக்க வெளியே வந்துள்ளார். அப்போது திடீரென அடையாளம் தெரியாத மூன்று பேர் பிரகாஷை கண்மூடித்தனமாகத் தாக்கிவிட்டு வீட்டுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த சுரேஷையும் தாக்கியுள்ளனர்.

இதில் இருவருக்கும் தலையில் சரமாரியாக வெட்டு காயம் விழுந்துள்ளது. பின்னர் அவர்களிடமிருந்து இரண்டு செல்போன்கள், ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துவிட்டு மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர் இச்சம்பவம் குறித்து ஒரகடம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா உத்தரவின்படி ஸ்ரீபெரும்புதூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் ஒரகடம் காவல் ஆய்வாளர் ராஜாங்கம் தலைமையில் உதவி ஆய்வாளர் தர்மலிங்கம், தலைமைக் காவலர்களுடன் சென்று விசாரணை மேற்கொண்டார்.

இதையடுத்து நாவலூர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த நந்தகோபால் (19), அதே பகுதியைச் சேர்ந்த டில்லி பாபு (21), செல்வம் ஆகிய மூவரையும் கையும் களவுமாகக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

மேலும் இவர்களிடமிருந்து கொள்ளைடிக்கப்பட்ட செல்போன், பணத்தை மீட்டு பிரகாஷிடம் ஒப்படைத்த காவல் துறையினர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களிடமிருந்த ஆயுதங்களையும் பறிமுதல்செய்தனர்.

குற்றம் நடந்து சுமார் 6 மணி நேரத்திற்குள்ளாக 3 பேர் கைதுசெய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபரிடம் கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள் ஒப்படைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.