ETV Bharat / state

கல்குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்குக - தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கம் - quarry accident

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்குவாரிகளை லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து எம்.சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிம் மனு அளிக்கப்பட்டது.

கல்குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ள அனுமதியும்,பாதுகாப்பும் வழங்குக -  தமிழ்நாடு எம்.சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர் சங்கம்

author img

By

Published : May 21, 2022, 4:33 PM IST

காஞ்சிபுரம்: கல்குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ள தங்களுக்கு அனுமதி அளித்திடவும், அதே போல் அவ்வாறு ஆய்வு மேற்கொள்ள தங்களுக்கு தகுந்த பாதுகாப்பினையும் அளித்திட கோரியும் தமிழ்நாடு அனைத்து எம்.சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்தலைவர் யுவராஜ் தலைமையில் சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டத்தினை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் நேற்று(மே 20) காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் , தமிழகத்தில் கனிம வளத்துறையின் கீழ் இயங்கி வரும் கல்குவாரிகளில் மணல் சரிவு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிய வண்ணம் உள்ளது. இதனால் உயிர்ச் சேதங்கள் ஏற்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டத்தில் கல்குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் , கல்குவாரி ஒன்றில் மணல் சரிவு ஏற்பட்டு இரு நபர்கள் உயிரிழந்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 176 கிரஷர்கள் செயல்பட்டு வரும் நிலையில் 25 நிறுவனங்கள் மட்டுமே மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று எம்.சாண்ட் அரவை மேற்கொள்கின்றனர்.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் பேட்டி

அனுமதி இல்லாமல் இயங்கும் கிரஷர் தொழிற்சாலையிலிருந்து தரமற்ற எம் சாண்ட் மூலம் கட்டப்படுவதால் கட்டுமானத்தில் தரம் குறையும் வாய்ப்பு உள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் கல்குவாரிகள் மற்றும் எம் சாண்ட் கிரஷர்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு கனிம விதிகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்குவாரிகளை லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பார்வையிட அனுமதிக்க வேண்டும் எனவும் அதற்கான பாதுகாப்பும் ஏற்பாடு செய்திட வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் பல முறை இதுகுறித்து மனு அளித்தும் , மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் புதிய அரசாவது இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: குவாரி விபத்து - தலைமறைவாக இருந்த உரிமையாளர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.