தமிழ்நாடு முழுவதும் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தொடங்கியுள்ளன. அதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் காந்தி ரோடு பெரியார் தூண் அருகே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் பரப்புரை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில், "எதிர்க்கட்சியினருக்கும் அவர்களது கூட்டணி கட்சியினருக்கும் தேர்தல் பயம் வந்து விட்டது. எதிர்க்கட்சியினர் பொய் வாக்குறுதிகளை தொடர்ந்து கூறி வருகின்றனர். அதன் மூலம் அவர்கள் வெற்றி பெறலாம் என நினைக்கின்றனர். அது வருகின்ற தேர்தலில் நடக்காது. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத கட்சியாக திமுக உள்ளது" என்றார்.
அப்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் தலைமையில் ஏராளமானோர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே. வாசன் கூறியதாவது, "அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாமக மிக முக்கியமான கட்சி. எனவே அவர்களின் கோரிக்கையை அதிமுக பரிசீலனை செய்யும் என நினைக்கிறேன்" இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: சசிகலா சொந்த ஊரில் ஆரவாரம்.. விரைவில் ஆட்சியில் அமர்வார் என தொண்டர்கள் நம்பிக்கை!