ETV Bharat / state

உலகப்பிரசித்திபெற்ற கல்கருடபகவான் கோயிலில் திருவிழா கொடியேற்றம்! - 108 vaishnava temple

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்தி பெற்ற கல்கருட தலமாகவும் விளங்கும், நாச்சியார்கோயில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

கல்கருடபகவான் கோயிலில் கொடியேற்றம்
கல்கருடபகவான் கோயிலில் கொடியேற்றம்
author img

By

Published : Mar 29, 2023, 9:05 PM IST

கல்கருடபகவான் கோயிலில் கொடியேற்றம்

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே நாச்சியார்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில், ஸ்ரீனிவாச பெருமாளும், வஞ்சுளவல்லி தாயாரும் தம்பதி சமேதராய் திருமணக் கோலத்தில் நின்று, பக்தர்களுக்கு சேவை அருள்பாலிப்பதால், இங்கு தாயாருக்கென்று தனி சந்நிதி இல்லை. 108 வைணவத் தலங்களில் 20ஆவது திவ்ய தேசமாகவும், சோழ நாட்டு திருப்பதிகள் நாற்பதில் 14ஆவது திவ்ய தேசமாகவும் இத்தலம் போற்றப்படுகிறது.

இங்கு மேதாவி மகரிஷியின் பிராத்தனையினை நிறைவேற்ற அவரது மகளாக தோன்றிய மகாலட்சுமியை மானிட உருவத்தில் வந்த ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கல்யாணம் புரிந்துகொண்டார். இத்தலம் திருமங்கையாழ்வாரால் நூறு பாசுரங்கள் அருளி மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட புண்ணிய தலம் என்ற பெருமையும் கொண்டது.

உலகிலேயே இத்தலத்தில் மட்டுமே ஒரே கல்லால் ஆன மிகப்பெரிய கல்கருடபகவான் அமைந்துள்ளது. கல்கருடபகவான் தனி சந்நிதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். மற்ற தெய்வங்களைப் போல இவருக்கும் நாள்தோறும் 6 கால பூஜைகள் நடைபெறுகின்றது. வருடத்தில் மார்கழி மற்றும் பங்குனி என இரு முறை மட்டும் சந்நிதியில் இருந்து வெளிவரும் இக்கல்கருட பகவானை, முதலில் சந்நிதியில் இருந்து வெளியே வரும்போது 4 பேரும் தொடர்ந்து 8, 16, என 32 பேர் என தூக்குபவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்வதும் கல் கருடன் மீண்டும் சந்நிதிக்குத் திரும்பும்போது, அதே முறையில் 32, 16, 8 என குறைந்து 4 பேருடன் சந்நிதியைச் சென்றடைவதும் வழக்கம்.

இக்கல் கருட பகவானைத் தொடர்ந்து ஏழு வியாழக்கிழமை வழிபடுவதன் மூலம் பிரார்த்தனைகள் அனைத்தும் விரைந்து நிறைவேறும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு பெற்ற இத்தலத்தில், பங்குனி பெருந்திருவிழா, பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் இவ்விழாவின் தொடக்கமாக இன்று உற்சவ பெருமாள் தாயாருடன் கொடிமரம் அருகே எழுந்தருள, பட்டாட்சியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க, கருடாழ்வார் சின்னம் வரையப்பட்ட கொடி மரத்தில் ஏற்றப்பட்டு நட்சத்திர ஆரத்தி செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவினை முன்னிட்டு திருவீதியுலாவிற்கு பதிலாக நாள்தோறும் யாளி, கிளி, சூரிய பிரபை, சேஷ, அன்னபட்சி, கமல, அனுமன், யானை, குதிரை எனப் பல்வேறு வாகனங்களில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால், அனைத்து நாட்களிலும் பிரகார உலாவாக நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நான்காம் நாளான ஏப்ரல் 01ஆம் தேதி சனிக்கிழமை மாலை உலகப் பிரசித்தி பெற்ற கல்கருட சேவையும், தொடர்ந்து 09ஆம் நாளான ஏப்ரல் 06ஆம் தேதி வியாழக்கிழமை தேரோட்டத்திற்குப் பதிலாக, பெருமாள் தாயார் கோரதப்புறப்பாடும், தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. பின்னர் 10ஆம் நாளான ஏப்ரல் 07ஆம் தேதி வெள்ளிக்கிழமை சப்தாவர்ணமும், பிறகு 08ஆம் தேதி சனிக்கிழமை விடையாற்றியுடன், இவ்வாண்டிற்கான பங்குனி பெருந்திருவிழா இனிதே நிறைவு பெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பீமரத சாந்தி திருமணம் செய்து கொண்ட நடிகர் செந்தில்.. மகன்கள், பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சி..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.