ETV Bharat / state

ஜன. 12 முதல் ஃபாக்ஸ்கான் இயக்கம்: பெண் தொழிலாளர்களுக்கு கரோனா சோதனை தீவிரம்

author img

By

Published : Jan 10, 2022, 10:27 PM IST

Updated : Jan 10, 2022, 10:34 PM IST

ஜனவரி 12ஆம் தேதிமுதல் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை மீண்டும் இயக்கப்படுகிறது. இதையொட்டி பெண் தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பெண் தொழிலாளர்களுக்கு கரோனா சோதனை தீவிரம்

காஞ்சிபுரம்: நாளை மறுநாள் (ஜனவரி 12) முதல் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை மீண்டும் இயங்கப்படவுள்ளதால் விடுதிகளில் தங்கியிருக்கும் பெண் தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் பகுதியில் பிரபல ஐபோன் செல்போனின் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையான ஃபாக்ஸ்கான் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு 90 விழுக்காட்டிற்கும் மேல் பெண் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

சுகாதாரமற்ற உணவும், வெடித்த போராட்டமும்

குறிப்பாக வட, தென் மாவட்டங்கள் எனப் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் பணிபுரிவதால் அவர்களுக்கென காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு தங்கும் விடுதிகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு தங்கும் விடுதியும் செயல்படுகின்றன.

இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கிவந்த ஃபாக்ஸ்கான் பெண் தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் சமைக்கப்பட்ட சுகாதாரமற்ற உணவு காரணமாக 100-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு மயக்கமடைந்து தனியார், அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் எட்டு பேர் மிகவும் உடல் நிலை மோசமடைந்து காணப்பட்ட நிலையில் அவர்களின் உடல்நிலை குறித்து உடனிருந்த தொழிலாளர்களுக்குத் தொழிற்சாலை நிர்வாகம் தெரிவிக்காததால் தொழிற்சாலை நிர்வாகத்தைக் கண்டித்து திடீரென மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை அமைந்துள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாபெரும் சாலை மறியல் போராட்டத்தினை முன்னெடுத்ததால் சுமார் 18 மணி நேரமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஜனவரி 12 முதல் தொழிற்சாலை இயக்கம்

அதன்பின் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எம். ஆர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். சுதாகர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்களிடம் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்திய பின் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் நடத்திய சுமூகப் பேச்சுவார்த்தைக்குப் பின் சாலை மறியல் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

மேலும் தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டு ஊதியத்துடன்கூடிய விடுப்பும் அளிக்கப்பட்டு பெண் தொழிலாளர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அதன்பின் இரு அமைச்சர்களும் ஃபாக்ஸ்கான் பெண் தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டு தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதிசெய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொழிற்சாலை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.

அதையடுத்து தொழிற்சாலை நிர்வாகத்தினை மாற்றியமைத்து பெண் தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் பூர்த்திசெய்து கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த தொழிற்சாலையானது தற்போது ஜனவரி 12 முதல் திறக்கப்பட்டு மீண்டும் இயங்க உள்ளது. அதையொட்டி சொந்த ஊர்களிலிருந்து பெண் தொழிலாளர்கள் தற்போது தாங்கள் தங்கியிருந்த தங்கும் விடுதிகளுக்குத் திரும்பியுள்ளனர்.

பெண் தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை

இந்நிலையில் சொந்த ஊர்களிலிருந்து தற்போது தங்கும் விடுதிகளுக்குத் திரும்பிய பெண் தொழிலாளர்களுக்குத் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்படி கரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு மூன்று விடுதிகளிலும் இன்று சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு விடுதிகளில் தங்கியுள்ள பெண் தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. நாளை மறுதினம் முதல் மீண்டும் பணிக்குத் திரும்ப உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை பெண் தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டு எவ்வித பாதிப்பும் இல்லாத தொழிலாளர்கள் மட்டுமே தொழிற்சாலையில் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

பெண்கள் போராட்டத்தை அடுத்து ஆப்பிள் நிறுவனம் ஃபாக்ஸ்கானை பணித்திறனைக் கண்டறியும் காலத்தில் (Probation) வைத்துள்ளதாக அறிவித்தது. மேலும் ஃபாக்ஸ்கான், தனது நிர்வாகத் தலைமையில் மாற்றம் கொண்டுவருவதாகவும் கூறியிருந்தது. கடந்த ஆண்டு, கர்நாடகத்தில் ஆப்பிள் உதிரிபாக தயாரிப்பு நிறுவனத்தில் போராட்டம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜன. 31 வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு

Last Updated : Jan 10, 2022, 10:34 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.