ETV Bharat / state

முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் தலைவர் உட்பட 5 பேர் தகுதி நீக்கம் - kancheepuram

காஞ்சிபுரம்: முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்திலுள்ள தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட 5 பேரினை தகுதி நீக்கம் செய்து கைத்தறி மற்றும் துணிநூல் துணை இயக்குனர் நடவடிக்கை எடுத்துள்ளது நெசவாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

dfsa
dfsa
author img

By

Published : Apr 22, 2021, 2:40 AM IST

பட்டு நகரமான காஞ்சிபுரம் காந்தி சாலையில் காஞ்சிபுரம் ஸ்ரீ முருகன் பட்டு கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர்களை உறுப்பினர்களாக கொண்டு செயல்பட்டுவரும் இச்சங்கத்தில் அதிமுகவை சேர்ந்த வீ. வள்ளி நாயகம் தலைவராகவும், திருமதி ஜெயந்தி சோமசுந்தரம் துணை தலைவராகவும்‌, நிர்வாக குழு உறுப்பினராக அதிமுக, திமுகவினர் என பலர் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2017-18ஆம் ஆண்டு சங்க தணிக்கை நடைபெற்றது. இதில் பல குளறுபடிகள் உள்ளதை கண்ட தணிக்கை அலுவலர்கள் இது குறித்த தனி அறிக்கையை காஞ்சிபுரம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை துணை இயக்குனருக்கு அளித்தனர்.

அதனடிப்படையில் 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 81 விசாரணை அறிக்கையின் கூடுதல் அறிக்கையின் அடிப்படையில், காஞ்சிபுரம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் துறை துணை இயக்குனர்கள் செயல்முறை ஆணைபடி 1983ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டப்பிரிவு 36(1) கீழ் சங்க தலைவரான வீ.வள்ளிநாயகம் மற்றும் திருமதி ஜெயந்திசோமசுந்தரம் துணைத் தலைவர் , நிர்வாக குழு உறுப்பினர்களான எஸ்.கீதா , கிருஷ்ணமூர்த்தி மற்றும் இளங்கோவன் ஆகிய 5 பேரையும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக காஞ்சிபுரம் கைத்தறி மற்றும் துணி நூல் துறை துணை இயக்குனர் ஆனந்த் அறிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.