ETV Bharat / state

மார்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்! - kancheepuram news

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் இன்று வாலாஜாபாத் மார்க்கெட் பகுதியில் காய்கறிகளை விற்பனை செய்து பொது மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதிமுக அமைச்சர் வி.சோமசுந்தரம்
மார்கெட்டில் காய்கறி விற்பனை செய்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!
author img

By

Published : Apr 2, 2021, 2:30 PM IST

தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைப்பெறவுள்ளது. இதனால் அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் உத்திரமேரூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம், அத்தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது உத்திரமேரூர் தொகுதிக்குள்பட்ட வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில், பேருந்து பயணிகளிடம் வாக்கு சேகரித்து, தனது பரப்புரையை தொடங்கிய அவர், வாலாஜாபாத் மார்க்கெட் பகுதிக்கு சென்று அங்குள்ள மார்க்கெட் வியாபாரிகளிடமும், பொது மக்களிடமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் காய்கறிக் கடை ஒன்றில் வாக்கு சேகரித்தப்போது, காய்கறிகள் வாங்க வந்த பொது மக்களுக்கு, காய்கறிகளை விற்பனை செய்து, வாக்கு சேகரித்தார். பின்னர் வாலாஜாபாத் பகுதி முழுவதும், அதிமுக மற்றும் கூட்டணிக்கட்சி தொண்டர்கள் படைச்சூழ அவர் தீவிர பரப்புரை மேற்கொண்டார்.

வாக்கு சேகரிப்பின் போது அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் எஸ்.எஸ்.ஆர் சத்யா, வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர் அக்ரி.நாகராஜன் உட்பட அதிமுக, பா.ம.க, பா.ஜ.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: 'சபரீசன் வீட்டில் சோதனை திட்டமிட்ட பழிவாங்கும் போக்கு' - திருமா குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.