காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்தில் 73ஆவது சுதந்திர தின விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதற்கான பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு காஞ்சிபுரம் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்பி மரகதம் குமரவேல் பரிசுகளை வழங்கினார்.
இதில் பேசிய மரகதம் குமரவேல், இளைஞர்களையும், மக்களையும் உற்சாகப் படுத்தும் இத்தகையப் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என கூறினார்.