ETV Bharat / state

'காஞ்சிபுரம் தூய்மையான நகரமாக மாற்றப்படும்' - டி.ஆர்.பி.ராஜா

காஞ்சிபுரத்தில் வேகவதி, மஞ்சள் நீர் கால்வாயை மீட்டெடுத்து தூய்மையான நகரமாக மாற்றப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வுக்கூட்டத்தில் குழுவின் தலைவர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Feb 27, 2022, 3:50 PM IST

டி.ஆர்.பி.ராஜா
டி.ஆர்.பி.ராஜா

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவுக் கூட்டரங்கில் 2021-2022ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழுவின் ஆய்வுக்கூட்டமானது குழுவின் தலைவர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகைகள், நடைபெற்ற திட்டங்கள் மற்றும் திட்டத்தின் கால வரையறை, அதன் பயன், அத்திட்டத்தின் செயல்முறை வளர்ச்சி மற்றும் தற்போதைய நிலை குறித்து சம்பந்தப்பட்ட துறையினருடன் கலந்துரையாடல் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு

இதில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் டி.ஆர்.பி.ராஜா அலுவலர்களிடம் பேசுகையில், 'மதிப்பீட்டுக் குழு கேட்கின்ற கேள்விகளுக்கு தெளிவாகவும் உண்மையை மட்டும் மிக சுருக்கமாகவும் உங்களுக்குத் தெரிந்ததை மட்டும் கூறுங்கள். கேட்கின்ற கேள்விக்கு கேள்வியையே பதிலாக சொல்லக் கூடாது.

உங்களை நீங்கள் காப்பாற்றிக்கொள்ள உண்மைக்கு புறம்பான தகவல்களை கொடுக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அதன் விளைவுகள் மிகவும் கடினமாக இருக்கும். குறிப்பாக யாரையும் பாதுகாக்க முனையாதீர்கள். அது நிச்சயமாக உங்களுக்கு நல்ல விளைவுகளைத் தராது' என அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்துப்பேசினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் டி.ஆர்.பி. ராஜா பேசும்போது, ’பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணான காஞ்சிபுரம் நகரின் மையத்தில் உள்ள வேகவதி ஆறு, மஞ்சள் நீர் கால்வாய் மற்றும் நத்தப்பேட்டை ஏரி ஆகியவற்றில் அதிக கழிவுகள் கலப்பதை தடுத்து மாசற்ற சுகாதாரமான நகரமாக மாற்ற பரிந்துரைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கூவமாக காட்சியளிக்கும் வேகவதி, மஞ்சள் நீர் கால்வாயை மீட்டெடுத்து தூய்மையான நகரமாக காஞ்சிபுரம் மாற்றப்படும். இதேபோல் கீழ்கதிர்பூரில் செயல்படும் பட்டுப் பூங்காவிற்கு பெண்கள் பணிக்குச் செல்லும் வகையில் பேருந்துகளை இயக்கக்கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் பொன்னேரிகரை ரயில்வே மேம்பாலப் பணிகளை துரிதப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர ஏற்பாடு செய்யப்படும். காஞ்சிபுரம் நகரினை சென்னையைப்போல் சிங்கார காஞ்சியாக மாற்றம் செய்ய அரசுக்கு பரிந்துரைத்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஊரக திட்ட முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: போலியோ சொட்டு மருந்து முகாம் - முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.