ETV Bharat / state

’மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும்’ - Education awareness program

காஞ்சிபுரம்: மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

Education awareness program
author img

By

Published : Sep 27, 2019, 7:28 AM IST

செங்கல்பட்டில் நேற்று மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வுப் பரப்புரை நடைபெற்றது. மத்திய அரசின் புதிய கல்வித் திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன் அதனை சட்ட ரீதியாக கொண்டுவருவதற்கு மாநில அரசு குறிப்பாக முக்கியத்துவம் காட்டுவதால் அதனை எதிர்த்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பரப்புரையில் ஈடுபட்டனர்.

மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைக்கும் கொள்கையை மத்திய அரசு கொள்கையே திரும்பப் பெற வேண்டும் எனவும், அரசுப் பள்ளிகளை மூடக் கூடாது எனவும் கூறி மக்களிடையே விழிப்புணர்வை ஆசிரியர்கள் ஏற்படுத்தினர். தமிழ் வழிப் பள்ளிகளை அழிக்க வேண்டாம் என்றும், தொடக்கக் கல்வித் துறையை சீரழிக்கும் அரசாணை 145 ஐ திரும்பப்பெற வேண்டும் என்றும் கூறி பரப்புரை செய்தனர்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் விழிப்புணர்வுப் பரப்புரை

பணம் உள்ளவர்கள் படிக்கட்டும் பணம் இல்லாதவர் கெட்டுவிடட்டும் என்கின்ற மத்திய அரசின் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூட்டமைப்பின் சார்பாக ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டனர். இந்த விழிப்புணர்வுப் பரப்புரையானது வருகிற 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Intro:காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் இன்று மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது இதில் முன்னாள் மாநில தலைவர் மோசஸ் கலந்துகொண்டு உரையாடினார்.

Body:மத்திய அரசு கொண்டுவந்து இருக்கக்கூடிய புதிய கல்வி திட்டத்தை அமுல்படுத்த முன் அதனை சட்ட ரீதியாக கொண்டுவருவதற்கு மாநில அரசு குறிப்பாக அதிமுக அரசு முக்கியத்துவம் காட்டுவதாகும் அதனை எதிர்த்து மூன்றாம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து செய்து மத்திய அரசு கொள்கையே திரும்பப்பெற வேண்டும் அரசு பள்ளிகளை மூடக் கூடாது எனவும் மூடிய பள்ளிகளை அதற்கு தேவையான ஆசிரியர்களின் பணி நிமிர்த்தம் செய்து திரும்பவும் கூறியும் தமிழ்வழிப் பள்ளிகளை அழிக்க வேண்டாம் என்றும் தொடக்கக் கல்வித் துறையை சீரழிக்கும் அரசாணை 145 திரும்பப்பெற வேண்டும் இன்று ஆசிரியர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் பணம் உள்ளவர் படிக்கட்டும் பணம் இல்லாதவர் கெட்டுவிடும் என்கின்ற மத்திய அரசின் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூட்டமைப்பின் சார்பாக ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டனர்.

Conclusion:இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் ஆனது வருகிற 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் 29ம் தேதி கரூரில் பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.