காஞ்சிபுரம் மாவட்டம் பிரசித்தி பெற்ற அத்திவரதரை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். அத்திவரதரை தரிசித்து விட்டு பிறகு சுற்றியுள்ள இடத்தை ஆய்வு செய்தார். ஆய்வுகள் நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதரை காண்பதற்கு அதிக மக்கள் வருவார்கள் என கருத்துக் கணிப்பில் கூடுதல் குடிநீர் திட்டம், கூடுதல் கழிப்பறை, மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதனை அடுத்து நடந்து முடிந்த 23 நாள் வைபவத்தில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சாமியை தரிசித்து சென்றுள்ளனர். மேலும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாகனத்தின் மூலம் சாமியை தரிசித்து சென்றுள்ளனர். அதை தொடர்ந்து இக்கோயிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு மக்கள் பாதுகாப்பிற்காக அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற திருவிழாக்களில் மக்கள் பொறுத்திருந்து சாமியை தரிசித்து செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், முன்னதாக உயிரிழந்தவர்கள் போல் மீண்டும் நேராமல் இருக்க உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டார்.