ETV Bharat / state

விதை நெல்லை எடுத்து விருந்து வைக்கிறது பாஜக -சௌந்தரராஜன் - மாரத்தான் போட்டி!

காஞ்சிபுரம்:  சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பாக இன்று நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை அம்மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தொடங்கி வைத்தார், இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சௌந்தரராஜன், பாஜகவின் பொருளாதாரக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார்.

வெற்றி பரிசு பெறும் இளைஞர்
author img

By

Published : Sep 2, 2019, 12:38 PM IST

சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்றது. இதனை அம்மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்போட்டியில், ஏராளமான இளைஞர்களும் பள்ளி கல்லூரி மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஆர்வத்துடன் கலந்து கொண்ட இளைஞர்கள்
ஆர்வத்துடன் கலந்து கொண்ட இளைஞர்கள்

காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம் தேரடியில் நிறைவு பெற்றது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சிஐடியு தொழிற்சங்க மாநிலத்தலைவர் சௌந்தரராஜன், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், திரைப்பட இயக்குனர் லெனின் பாரதி, மற்றும் சிஐடியு தொழிற்சங்க மாவட்ட தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

போதைப்பொருள் ஒழிப்பு மாரத்தான் போட்டி!
போதைப்பொருள் ஒழிப்பு மாரத்தான் போட்டி!

இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சிஐடியு சங்க மாநில தலைவர் சௌந்தரராஜன்,

ரிசர்வ் வங்கியில் சேமிப்பு உள்ள ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியை ஒரே நேரத்தில் எடுத்து முதலாளிகளுக்கு கொடுப்பது உலக நாடுகளில் வேறெங்கும் இல்லாத செயல் ஆகும். இவ்வாறு செய்வது விதை நெல்லை எடுத்து விருந்து வைப்பதற்கு சமமாகும்.

மெட்ரோ ரயில் சேவையில் நுட்பமான வேலையை ஒப்பந்த தொழிலாளர்களை வைத்தும், அங்கு பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை வைத்து செய்வோம் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருப்பது மிகவும் தவறான நடவடிக்கை. ஆகவே மத்திய அரசு இதில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.

மாரத்தான் போட்டி!

மேலும் பேசிய அவர், நாட்டினுடைய பாதுகாப்புத் துறை, வங்கித் துறை, எல்ஐசி, சேலம் ஸ்டீல், உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒரு பாகமாக இந்த மெட்ரோ ரயில் சேவை திட்டமும் செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

இறுதியில், அரசின் இத்தகைய கொள்கைகளையும் செயல்களை தடுத்து நிறுத்த மக்களும், இளைஞர்களும் போராட முன்வர வேண்டும் என்றும் சௌந்தரராஜன் கேட்டுக்கொண்டார்.

Intro:
*ரிசர்வ் வங்கியில் சேமிப்பு உள்ள ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியை ஒரே நேரத்தில் எடுத்து முதலாளிகளுக்கு கொடுப்பது உலக நாடுகளில் வேறெங்கும் இல்லாத செயல்.*

காஞ்சிபுரத்தில் சிஐடியு தொழிற் சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன் பேட்டி

Body:சிஐடியு தொழிற்சங்கத்தின்மாநில மாநாடு நடைபெறுவதை
ஓட்டி போதைப்பொருள் ஒழிப்பு மாரத்தான் ஓட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

தொழிற்சங்கம் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு மாரத்தான் ஓட்டத்தில் ஏராளமான இளைஞர்களும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியில் இருந்து துவங்கிய மாரத்தான் ஓட்டம் தேரடியில் நிறைவு பெற்றது.
மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

இதில் சிஐடியு தொழிற்சங்க மாநிலத்தலைவர் சௌந்தரராஜன் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் திரைப்பட இயக்குனர் லெனின் பாரதி, மற்றும் சிஐடியு தொழிற்சங்க மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிஐடியு சங்க மாநில தலைவர் சௌந்தரராஜன்

இன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலையில் முதலாளிகளிடம் இருந்து பணத்தை எடுக்காமல் கடந்த ஆண்டு வரை லாபம் சம்பாதித்த நிலையில் அவர்களிடம் இருந்து பணத்தை எடுக்காமல் தொழிலாளிகளின் வேலையை பழிக்காதீர்கள் உங்களால் முடியவில்லை என்றால் இரண்டு மூன்று மாதங்களுக்கு சம்பளம் வழங்கி நிலைமை சீரான பின்னர் வேலையை வழங்குங்கள் என்று கூறாமல் அதற்கு பதிலாக முதலாளிகளுக்கு பணம் கொடுப்போம் என்பதும் அதற்கு ரிசர்வ் வங்கியில் சேமிப்பு உள்ள ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியை ஒரே நேரத்தில் எடுத்து முதலாளிகளுக்கு கொடுப்பது உலக நாடுகளில் வேறெங்கும் இல்லாத செயல் ஆகும்.

இவ்வாறு செய்வது விதை நெல்லை எடுத்து விருந்து வைப்பதற்கு சமமாகும்.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு எல்லாம் விற்று ஒரு லட்சம் கோடியை முதலாளிகளுக்கு தரப்போவது என்பதும், 70 ஆயிரம் கோடி மக்களின் வரி பணத்தை பொதுத்துறை வங்கிகளில் போட்டு அவற்றை முதலாளிகளுக்கு கொடுப்பது என்பதும் மாறாக தொழிலாளிகளுக்கு, சிறு குறு முதலாளிகளுக்கு அல்லது மிகவும் கஷ்டப்படும் என்ற இந்திய தமிழக விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை என்றும்,

மெட்ரோ ரயில் சேவையில் நுட்பமான வேலையை ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து அங்கு பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை வைத்து செய்வோம் என்பதும், 9 ரயில் நிலையங்களை அவர்களுக்கு தருவோம் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து இருப்பது மிகவும் தவறான நடவடிக்கை பயணிகள் உடைய பாதுகாப்பைக் கேள்விக்குறியாகியுள்ளது பலபேர் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம், நம்முடைய சொத்தை நாசப்படுத்துகிற செயல் ஆகவே அங்கு இருக்கின்ற மற்றும் நிர்வாகம்முரட்டுத்தனமாக எடுக்கும் முடிவாகும். ஆகவே அரசாங்கம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் படிப்படியாக எல்லாம் பொதுத்துறையின் தனியாருக்கு கொடுப்பதற்காக குறிப்பாக நாட்டினுடைய பாதுகாப்பு துறை, வங்கித் துறை, எல்ஐசி, சேலம் ஸ்டீல், உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை துறையையும் தனியாருக்கு தாரை வார்க்கும் ஒரு பாகமாக இந்த மெட்ரோ ரயில் சேவை திட்டமும் செயல்படுவதாகவும்,

Conclusion:ஆகவே அரசினுடைய இத்தகைய கொள்கைகளையும் செயல்களை தடுத்து நிறுத்த மக்களும், வேலை இல்லாத இளைஞர்கள் போராட முன்வர வேண்டும் என சிஐடியு மாநில தலைவர் சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.