செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூரில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது மீனவர்கள் மத்தியில் பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கு தேவையான வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் கடல் அரிப்பை தடுப்பதற்கு தேவையான தூண்டில் வளைவு அமைத்து தரப்படும். மீனவர்களின் கோரிக்கைகளை திமுக தனது தேர்தல் அறிக்கையிலும் சேர்த்துள்ளது. எனவே, மீனவர்கள் காக்கப்பட வேண்டுமென்றால் திமுக ஆட்சிக்கு வர வேண்டும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், செய்யூர் சட்டப்பேரவை உறுப்பினர் அரசு, மதுராந்தகம் சட்டப்பேரவை உறுப்பினர் சுந்தர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் வீட்டை முற்றுகையிடப் போவதாக தமிழர் விடுதலை களம் எச்சரிக்கை!