காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், உத்திரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினருமான க.சுந்தர் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், ஆர்.டி.அரசு, எஸ்.புகழேந்தி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அதிமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.