ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே ஸ்ரீபெரும்புதூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி திமுக சார்பில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அதில், “தமிழ்நாட்டில் இப்பொழுது அதிகம் கேட்கின்ற வார்த்தைகள் அடுத்த முதலமைச்சர் முக ஸ்டாலின்.
மேலும், “எடப்பாடி பழனிசாமி தன்னை சட்டப்பேரவை உறுப்பினர்கள் தான் முதலமைச்சராக தேர்ந்தெடுத்தார்கள் என்கிறார். சசிகலா முதலமைச்சர் ஆக்கவில்லையா? நம்பகத்தன்மைக்கும், நன்றி உணர்ச்சிக்கும் தமிழ்நாட்டில் இடமே இல்லையா?” எனக் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க...குட்டி நாயைத் தத்தெடுத்து தாயான ஆண் குரங்கு