ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலில் 60% வெற்றி - திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் - dmk victory

காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக 60 சதவீத இடங்களைக் கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சுந்தர் தலைமையில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி திமுகவினர் கொண்டாடினர்.

உள்ளாட்சித் தேர்தலில் 60% வெற்றி - திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

author img

By

Published : Jan 3, 2020, 4:51 PM IST

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை தமிழ்நாடு தேர்தல் ஆணையம், பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களை தவிர்த்து எஞ்சியுள்ள 27 மாவட்டங்களில் 5,090 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும் , 515 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகளுக்கும் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் நடத்தியது.

தேர்தல் நடந்து முடிந்த பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை முதல் தொடங்கி தற்போதும் எண்ணப்பட்டு வரும் நிலையில், திமுக கூட்டணி சார்ந்த ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர்கள் 60 விழுக்காட்டிற்கும் மேல் வெற்றி பெற்றுள்ளனர்.

பல பகுதிகளில் இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில், முன்னணியில் உள்ளதை கொண்டாடும் வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் உத்திரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான சுந்தர் தலைமையில் சின்ன காஞ்சிபுரத்திலுள்ள அண்ணா பவள விழா மாளிகையில் கூட்டம் நடைபெற்றது.

உள்ளாட்சித் தேர்தலில் 60% வெற்றி - திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

இதில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அங்கு அமைக்கப்பட்டிருந்த அண்ணா மற்றும் கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தப்பட்டது. பின்னர் பட்டாசுகள் வெடித்தும் , பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் திமுகவினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் ஜி.செல்வம் , சட்டப்பேரவை உறுப்பினர்கள் சி.வி.எம்.பி எழிலரசன், ஆர். டி .அரசு, திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: உச்சக்கட்ட பரபரப்பை நெருங்கும் முடிவுகள்!

Intro:காஞ்சிபுரம் 03.01.2020

தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக 60 சதவீத இடங்களை கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் தலைமையில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..

Body:தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்களை தமிழக தேர்தல் ஆணையம் பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களை தவிர்த்து எஞ்சியுள்ள 27 மாவட்டங்களில் 5090 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும் , 515 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகளுக்கும் தேர்தல்களை இரண்டு கட்டமாக கடந்த மாதம் நடத்தியது..

தேர்தல் நடந்த முடிந்த பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை முதல் தொடங்கி தற்போதும் எண்ண பட்டு வரும் நிலையில் திமுக கூட்டணி சார்ந்த ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் வேட்பாளர்கள் 60 சதவீதத்திற்கு மேல் வெற்றி பெற்றும் பலபகுதிகளில் இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் முன்னணியிலும் உள்ளதை கொண்டாடும் வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான க.சுந்தர் தலைமையில் சின்ன காஞ்சிபுரத்திலுள்ள அண்ணா பவள விழா மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த தீர்மானங்களும், அதனைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த அண்ணா மற்றும் கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் , பட்டாசுகள் வெடித்தும் , பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் திமுகவினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்..

Conclusion:இந்நிகழ்வில் காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் ஜி.செல்வம் , சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.எம்.பி எழிலரசன் , ஆர். டி .அரசு , நகர. , பேரூர், ஒன்றிய செயலாளர்கள் , திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்...
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.