காஞ்சிபுரம் அருகே கோனோரிகுப்பம் அட்கோ அவென்யூ பகுதியில் 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய தார் சாலை பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர், அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் கணேசன், அதிமுக, திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் யார் விழாவை தொடங்கி வைப்பது என கடும் போட்டி ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக, திமுக ஆகிய இரு கட்சியினரும் தொடக்கிவைக்க முன்வந்தனர்.
அப்போது முதலமைச்சர் புகைப்படம் இருப்பதால் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என காஞ்சிபுரம் திமுக எம்.எல்.ஏ. கூறினார். இதனைத் தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம், தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் அடங்கிய பேனரையும் அதிமுகவினரே அகற்றினர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் பங்கேற்று புதிய தார் சாலை பணிகளை தொடங்கிவைத்தார்
இந்நிகழ்ச்சியில் அதிமுகவினரே எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது புகைப்படங்களை அகற்றியதால் அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் பாதிப்பு: விமான நிலையத்தில் ஒத்திகை