காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தலானது கடந்த ஆறு மற்றும் ஒன்பது ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடந்து முடிந்தது. இதற்கான தேர்தல் முடிவுகளும் கடந்த 12 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று (அக்டோபர் 20) நடைபெற்றது. இதில் 11 மாவட்ட கவுன்சிலர்கள், 98 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 273 ஊராட்சி தலைவர்கள், 1,938 வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், 11 மாவட்ட கவுன்சிலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றப்பின் முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர். அதேபோல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி அலுவலகத்திலுக் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர்.
இதையும் படிங்க: அம்மா உணவகத்தில் சப்பாத்தி கிடைக்காதது ஏன்? சென்னை மாநகராட்சி விளக்கம்