காஞ்சிபுரம்: மாதாமாதம் வரும் அமாவாசை நாள்களில், திங்கள்கிழமையன்று வரும் அமாவாசை, பெண்கள் அரசமரத்தைச் சுற்றிவந்து வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு அமாவாசை அன்றும் தாய் தந்தையை இழந்தவர்கள் தங்களது மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது, அன்னதானம் செய்வது வழக்கம்.
குறிப்பாக திங்கல்கிழமையன்று வரும் அமாவாசை அன்று திருமணம் ஆகாத பெண்கள், திருமணம் ஆகி குழந்தை பேறு வேண்டி இருக்கும் பெண்கள், அரச மரத்தைச் சுற்றிவருவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரம் பிரசித்திப்பெற்ற கச்சபேஸ்வரர் கோயிலில் உள்ள அரச மரத்தையும், அதன் கீழுள்ள விநாயகர், நாக தேவதைகளையும் ஏராளமான பெண்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற சுற்றிவந்து வழிபட்டுச் செல்வார்கள்.
அந்த வகையில் இன்று (ஜனவரி 31) திங்கள்கிழமை சோமவாரம் அமாவாசையை முன்னிட்டு காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் ஏராளமான பெண்கள் அரசமரத்தடியில் உள்ள விநாயகர், நாக தேவதைகளுக்கு மஞ்சள் குங்குமமிட்டு வழிபாடு செய்தனர்.
இதையும் படிங்க: Statue of Equality: ஸ்ரீ ராமானுஜர் சிலையை நரேந்திர மோடி திறந்துவைக்கிறார்